ஒரே ஒரு ஊரிலே

மாலை வெயில். வானம் மஞ்சள் பூசியிருந்தது. மேகங்கள் நிதானமாகப் போய்க் கொண்டிருந்தன. காற்று குளிர்ச்சியாக வீசியது. அந்தக் கொட்டிலிலிருந்து ரியூசன் முடிந்து, எல்லோரும் வெளியே வந்தனர். அவரவர் குடும்பத்தின் பொருளாதார நிலமைகளுக்கேற்ப வர்ணங்களிலும், தராதரங்களிலும் வேறுபட்ட உடைகளுடன் இளைஞர், இளைஞிகள் கலகலத்து வந்தனர். சைக்கிளில் சிலர் முண்டியடித்துக் கொண்டோடினர். தோழர், தோழிகளுடன் சிலர் குழுக்களாகப் போனார்கள். எல்லோரும் வெளியேறினாலும் இரண்டு பேர் மட்டும் அதே இடத்தில் மரத்தின் கீழ் காத்திருந்தனர். யோன் – காஞ்சனா எனப்பட்ட அவர்களை … Read more

பாதியில் முடிந்த கதை

அதிகாலை. குளிர் காற்று உடலைத் தழுவிப் போனது. இரண்டொரு பறவைகள் அவசரமாக எங்கோ பறந்து போயின. சேவல் ஒன்று தனித்து கூறியது. நான் கிணற்றடியில் பல் துலக்கிக் கொண்டிருந்தேன். பற்பொடி கையிலிருந்து இடம் மாறி பற்களோடு சண்டை பிடித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி துப்பி அந்தச் சண்டையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டிருந்தேன். என் கவனம் முழுவதும் பல் துலக்குவதில் லயிக்கவில்லை. ஏதேதோ நினைவுகள் நிழலாடின. சுவூதிக்குப் போவதற்காக ஏஜென்சி ஒருவனிடம் பணம் கட்டியிருந்தேன். பல மாத கால தாமதத்தின் … Read more

காதல்

மறுபடியும் கண்கள் வலப்பக்கம் திரும்புவதை ஜீவனால் தவிர்க்க முடியவில்லை. விட்டுவிட்டான். அவள் மறுபடியும் தெரிந்தாள். ஜீவனின் கண்கள் தன்னில் ரோந்து செய்வதை அறியாமல் ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவதைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அப்போதும் அவள் அழகாகவே இருந்தாள். ஜீவனின் கண் நரம்புகள் அவசரமாக மூளைக்கு சிக்னல் கொடுக்க அதுவும் அவசரமாக விழித்து கடமையைக் கவனித்தது. ‘அதென்னெண்டு டொச் பெட்டையளுக்கு இப்பிடி செழுமையான கன்னங்கள்? கட்டையா வெட்டினாப் பிறகும் தலைமுடி அழகாக இருப்பதன் மர்மம் என்ன? உதடுகள் ஏன் சிவந்து … Read more

பசி

கூதல் காற்று பரந்த மனப்பான்மையுடன் இடுக்குகளுக்குள்ளால் நுழைந்து குடிசைக்குள் பரவியது. ஞானப்பிரகாசம் வீறிட்டுக் கத்திக்கொண்டிருந்தான். பெயரின் அளவிற்குச் சம்பந்தமில்லாமல் அவன் உடம்பு சிறியதாக இருந்தது. இரண்டு வயதென்றால் அப்படித்தானிருக்கும். தன்னைச் சுற்றிப் போடப்பட்டிருந்த துணிக் குவியலைத் தாறுமாறாக்கியபடி அவன் அழுது கொண்டிருந்தான். அவனுடைய தேவை எதுவென்று தெரிந்தும் தெரிந்து கொள்ளாதவள் போல கன்னியம்மா அவனருகில் பேசாமல் படுத்திருந்தாள். கண்கள் கூரையின் இடைவெளிகளிளுடாக மேலே தெரியும் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. சூசை சாக்கால் போர்த்திக்கொண்டு குடிசை வாசலில் மணலில் … Read more

மனைவி இறக்குமதி

பிராங்பேர்ட விமான நிலையத்தின் கார் நிறுத்துமிடம். சிறீ கைக்கடிகாரத்தைப் பார்த்தான். பதின்மூன்றைம்பது காட்டியது. பதின்னான்கிற்கு விமானம் வந்துவிடும். மின் ஏணி இன்னமும் பதினோராவது தளத்திலேயே தாமதித்தது. ‘மேலே என்ன குடும்பம் நடத்தியினமே? ‘ என்று சினந்தான். கீழ்நோக்கி வந் மின் ஏணி அந்தத் தளத்திலே தங்காமல் கீழே விரைந்தது. காத்திருந்து ஏமாந்த கொலண்ட் தம்பதிகள் டச்சில் திட்டியபடி படிகளை பாவிக்க ஆரம்பித்தார்கள். நேரம் விரைவாக ஓடுவதைப் பார்த்து சிறீ பதறினான். ‘சைச பிளைற் வரப்போகுது’. கீழிருந்து மின் … Read more

ராதா பெரிசானபின்

‘என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார் தசரதர். அவள் என்ன கேட்பாளோ என்று ஆவலாயிருந்தார். கைகேயி தலையைப் பரப்பிக்கொண்டு முகத்தில் கொஞ்ச வஞ்சத்துடன் அவர் முன்னால் வந்தாள். ‘கேட்டபின் மறுக்கமாட்டீர்களே?’ என்று சந்தேகப்பட்டாள். ‘இல்லைத் தயங்காமல் கேள். இந்த தசரதன் சொன்ன வாக்கு மீற மாட்டான்’ தசரதர் இன்னும் ஆவலானார். ‘ராமன் பதினான்கு வருடங்களுக்கு காட்டில் இருக்கவேண்டும்’ என்றாள் கைகேயி நிதானமாக. தசரதர் திடுக்கிட்டார். முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. கைகளைப் பிசைந்தார். நாடியைத் தடவினார். கொஞ்சம் நடந்து … Read more

நாளை

வினோத், மஞ்சுளா அன்ரியிட்டப் போய் கசற் வாங்கிக்கொண்டு வா” என்று சொன்ன சாவித்திரி குமுதம் வாசித்துக் கொண்டிருந்தாள். ”எனக்குத் தெரியாது. நீங்க போய் வாங்குங்கோ” பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த வீட்டு வேலையில் கவனமாயிருந்த வினோத் தனதலுவலில் மூழ்கினான். ”உங்க என்ன போட்டுக் கிளறிக்கொண்டிருக்கிறாய்? கசற்ற வாங்கித் தந்திட்டு பிறகு என்னண்டாலும் செய்” ”நான் மாட்டன். வீட்டு வேல செய்து முடிக்காட்டி நாளைக்கு ரீச்சர் பேசுவா” ”பெரிய எஞ்சினியர் படிப்புத்தானே படிக்கிறாய். நாள் முழுக்க விளையாடு. நான் ஏதேன் அலுவல் … Read more

ஒரு தொழிலாளியும், ஒரு தொழிலாளியும்

தலைக்குக் குளித்து, தூசுகளைத் தற்காலிகமாக விரட்டியபின் உடை மாற்றிக்கொண்டு உதயன் வெளியே வந்தான். காந்தனிடம் மாறிய காசின் ஒரு பகுதியை இன்று கொடுப்பதாகத் தவணை. சம்பளத்தை வங்கியிலிருந்து வழித்தாயிற்று. முடிவதற்குள் கூடுமானவரையில் கடன்கள் தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் பின்னர் பல்லிளிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். பஸ்தரிப்புக்கு வந்து காத்து நிற்கையில் வேலை செய்யும் போதிருந்த இறுக்கம் தளர்ந்து இலேசானான். விஞ்ஞானத்தால் அநியாயமாகப் பாதிக்கப்பட்ட வெயில் உக்கிரமாயிக்க, பலர் இயலுமானவரை தங்கள் உடம்பைப் பகிரங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். ‘வேர்த்தால் நல்லாயிருக்கும்’ என்று நினைத்துக்கொண்டான். … Read more

அம்பது டொலர் பெண்ணே….

அவளைக் கண்டேன். கட்டைக் கரிய கூந்தல். வட்டக் கருவிழியா என்று சொல்ல முடியாதபடிக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தாள். அரைக்கை போன்ற வெயில் கால உடைகளில் என்னைப் போலவே மாநிறம்! சில விளக்கமில்லாததுகள் கறுப்பு என்று என்னைச் சொல்வதை காதில் வாங்குவதில்லை. அவளைச் சுற்றி டொச் இளசுகள். மாணவர்கள் என்பதை அலட்சியமாகத் தெருவில் போடப்பட்டிருந்த பாரிய பைகள் காட்டின. இரண்டு, மூன்று சிகரெட் பற்ற, சிலது ஓடிப்போய் பிடித்து பெரியபிள்ளைகள் விளையாட்டு விளையாட, ஆங்காங்கே ஒன்றை ஒன்று அணைத்து உதடுகளால் … Read more

தெரியவராதது

ஆரம்பிக்கும் போதிருந்த மனநிலை இப்போதில்லை. அதுபாட்டுக்குப் புல்லாகிப் பூடாய், புழுவாகிப் பாணியில் எரிச்சலாகி, சலிப்பாய், விரக்தியாய் முடிந்தது. இது வழமைதான். வராவிட்டால் எங்கே என்று ஏங்கும். வந்தாலோ பழைய கதைதான். ‘பாவம் அதுகள். நான் உதவாம ஆர் உதவுறது? என்னை விட்டிட்டு அதுகளும் ஆரிட்டப் போறது’ என்று கவலைப்படும் அவனுக்குப் பெயர் பாலகிருஸ்ணன். பாலு என்று வீட்டிலும், இங்கேயும் வசதிக்குச் சுருக்கிக் கூப்பிட்டார்கள். அடுத்த விசாப் புதுப்பித்தலுடன் வயது இருபத்தைந்து முடிந்து விடும். தலைமுடி இதற்குப் பொய்ச்சாட்சி … Read more

ஒரு அம்மாவும், அரசியலும் !

சோறு ஆக்கி முடித்து சமையலறையை விட்டு சின்னமணி வெளியில் வந்தபோது தபாற்காரன் சுத்தமாகப் பொறுமையிழந்திருந்தான். சைக்கிள் மணிச்சத்தத்தில் அவனுடைய ஆத்திரம் வெளிப்பட்டது. சின்னமணி அருகில் வந்ததும் கடிதத்தை எறியாத குறையாக நீட்டிவிட்டு, தனக்குள் திட்டியபடி அடுத்த வீட்டுக்குப் போனான். நீலக்கடிதம். இரண்டாவது மகன் தாசன் மேற்கு யேர்மனியிலிருந்து அனுப்பியிருந்தான். ஈரக்கையை சீலையில் துடைத்துவிட்டு, கடிதத்தைப் பிரித்தபடி சின்னமணி வீட்டுக்குள் வந்தாள். அன்புள்ள அம்மா, அண்ணாவில் ஆரம்பித்து, நலமறிய அவாவி, இறைவனை வேண்டி, தொடர்ந்த கடிதத்தில், சில புதினங்களும் … Read more

பனியில் எரியும் இரவுகள்

கடைசி மூட்டையையும் தூக்கி கீழே வீசிவிட்டு நிமிர்ந்து, நாரி உளைவெடுத்து, வியர்வையைக் கையால் வழித்து எறிந்து, லொறியில் சாய்ந்துகொண்டபோதுதான் அந்த யோசனை வந்தது. இந்த லொறி என்ரை லொறியாயிருந்தா..? முருகேசு ஒரு மூட்டையில் குந்தியிருந்து ஆட்களின் சுறுசுறுப்பை அளந்து கொண்டிருந்தான். பணம் பூசிய உடம்பு. அவனருகில் போய்.. “முருகேசு.. அடிக்கடி கொழும்பு போய் வாறாய். கட்டுபடியாகுதுதானே..?” “பெரிசா சொல்லுறதுக்கில்லையடாப்பா. அங்கை வெளிக்கிட்டு இஞ்சை வாறவரைக்கும் கப்பம் கட்டிக்கொண்டே வரவேணும். இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தியிலயும் பரியர் போட்டுக்கொண்டு தடியங்கள் … Read more

வந்தவள் வராமல் வந்தால்

”ஹலோ” ”……” ”ஹலோ” இரைச்சல், உள்ளாலை கசமுச. தொடர்ந்து ….. ”ஹலோ” ”நான் ஜேமனியிலிருந்து செல்வம் கதைக்கிறன். மைதிலியோட கதைக்கலாமோ?” ”நான் இஞ்ச மார்க்கண்டு கதைக்கிறன். என்ன மாதிரி? காசலுவலுகள் முடிஞ்சுதோ?” ”அண்ணை ….என்னால முடிஞ்சளவுக்கு மாறியிருக்கிறன். விடிய பக்ஸிலை அனுப்பிவிடுறன்” ”முடிஞ்சளவுக்கெண்டா ….முழுக்க இல்லையோ?” ”அண்ணை…… ஏற்கனவே பன்ரண்டு தான் பேசி முடிச்சது. பிறகு சிங்கப்பூரில நிண்டு கொண்டு ரண்டனுப்பச் சொன்னியள். அனுப்பினனான். இப்ப மொஸ்கோவில நிண்டு கொண்டு திருப்பியும் ரண்டு கேக்கிறியள். நான் எங்கையண்ணை … Read more

ஒரு பிரஜை, ஒரு நாடு

1987, மே.22, வடமாராட்சி. ஊர் அமைதியாக இருந்தது. விலங்குகளும் சத்தம் போடவில்லை. பாதை விளிம்புகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உறக்கத்திலிருந்தன. எந்த வீடும் வெளிச்சமாயிருக்கவில்லை. பாடசாலையிலிருந்து 3 வீடுகள் தள்ளியிருந்த அந்த வீடும் அமைதியாயும், இருளாயும் இருந்தது. வீட்டினுள் உருவங்கள் சத்தமின்றி நடமாடின. பழகிப் போய்விட்டதால் இருளில் நடமாடுவதற்கு அங்கு உருவங்கள் தடுமாறவில்லை. ‘அம்மா பயமாயிருக்கம்மா’ மிக மெதுவாக அந்தச் சிறுவன் பயப்பிட்டான். ‘உஷ். பயப்பிடாத. ஒண்டும் நடக்காது.’ அவன் அருகிலிருந்த அம்மாவின் குரலிலும் கலக்கம் கலந்திருந்தது. கடிகாரம் … Read more

தூள்

17.2க்குரிய புகையிரதங்கள் வருவதும் போவதுமாயிருந்தன. அடைபட்டிருந்த பயணிகள் வெளியே சிதற, காத்திருந்தவர்கள் முண்டியடித்து இருக்கை பிடித்தனர். எங்கும் இரைச்சல், ஆரவாரம். ஒலிபெருக்கிகள் வழமையான அறிவிப்புகளை தப்பாமல் ஒப்புவித்துக்கொண்டிருந்தன. மார்கழி மாதக் குளிரிலிருந்து தப்புவதற்காய் அநேகமாய் எல்லோரும் தலையிலிருந்து கால்வரை தடிப்பாய் போர்த்தியிருந்தார்கள். மூக்குச் சீறுவதும், இருமுவதும் சிம்பனியாயிருந்தது. புகையிரத நிலையத்தின் பின்பக்க வாசல். இருளைத் தடுத்து ஒளி விளக்குகள் யுத்தம் புரிந்து கொண்டிருந்தன. கொஞ்சத் தடிப்பாய் மழை தூறிக்கொண்டிருந்தது. வாகனங்கள் மிக எச்சரிக்கையாய் பயணித்தன. மழைக்காய் வாசலில் … Read more

அம்மா பாவம்

தோச்சு, மினுக்கி வைச்சிருந்த சட்டையாப் பார்த்து அம்மா எடுத்துத் தந்தா. நான் ஆசையோட வாங்கிப் போட்டன். கால்மேசுகளைப் போட்டாப் பிறகு சுகமாக சப்பாத்துக்களுக்குள்ள காலுகளை விட்டிட்டன். ஆனா முடிச்சுப் போட கஸ்ரமாய் இருந்தது. நான் சரியாகக் கஸ்ரப்படுகிறதைப் பாத்திட்டு அம்மா சிரிச்சுக்கொண்டே முடிச்சுப் போட்டுவிட்டா. கதிரையில இருந்து இறங்கி நிண்டன். அம்மா தள்ளி நிண்டு என்னை அழகு பார்த்தா. அவ எப்பவும் அப்படித்தான். அம்மாவுக்கு என்னில நல்ல விருப்பம். எனக்கும் அம்மாவில சரியான விருப்பம். கண்ணாடி மேசைக்கு … Read more

இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ

1997 சனவரி வெள்ளிக்கிழமை மொறட்டுவ… செனவிரத்தின வந்த போது வழக்கமான காலைநேரத் தூங்கலில் பொலீஸ் நிலையம் இருந்தது. இரண்டொரு பொலீஸ்காரர்கள் தமது இடங்களில் இருந்து ‘திவயின’, ‘லக்பிம’ படித்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை மக்களின் உடம்புக்குத் தரமான சவர்க்காரத்தை சிபாரிசு செய்து கொண்டிருந்தது. தடுப்புக் காவலில் இருந்த ஒரே ஒரு கைதி இன்னும் படுத்தே இருந்தான். எழும்புவதால் எதுவும் ஆகப்போவதில்லை என அவனுக்கு நன்கே தெரிந்தே இருக்கும். தனது மேசைக்கு வந்ததும் செனவிரத்தின மேலோட்டமாக … Read more

மேற்கின் ஒரு பக்கம்

புகை மூட்டமாகக் கவிந்திருந்தது. சுருள் சுருளாக, வளையம் வளையமாக புதிய புகைகள் வந்துகொண்டிருந்தன. இந்தக் கரும்புகைகள் எல்லாம் மேலே போய் மழையானால் அவ்வளவுதான். உலகமே வெள்ளத்தினால் மூச்சுத்திணறும். இல்லாவிட்டால் இருமும். சூழலை மாசடைவது பற்றியோ, தங்கள் சோர்ந்த நுரையீரல்களைப்பற்றியோ எந்த அக்கறையுமின்றி அவர்கள் தங்களால் முடிந்தளவு ஊதித்தள்ளியதைப் பார்த்து கவலையில் நானும் ஊதினேன். எல்லோர் வாயிலும் வாழைப்பழத்தில் சாம்பிராணிக் குச்சி குத்தியிருப்பதுபோல் வேறுவேறு விதமான சிகரெட்டுக்கள் சொருகியிருந்தன. மிஹெல் ஒன்றைப் பூரணமாக சாம்பலாக்கி, அடுத்ததை புகையிலை வைத்து … Read more

பலமா?

முன்கதைச் சுருக்கம் யேர்மனியின் பெரிய வீதிகளில் ஒன்று. எங்கு பார்த்தாலும் கார்கள்… லொறிகள்… பாரிய வாகனங்கள்….. நீளத்திற்கு வரிசையமைத்திருந்தன. பொறுமையிழந்தவர்கள் காரிலிருந்து இறங்கித் தாராளமாகத் திட்டினார்கள். மற்றும் பலர் சிகரெட் பிடித்தார்கள். கொண்டு வந்திருந்தவர்கள் எடுத்துச் சாப்பிட்டுக், குடித்தார்கள். ஒரு சிலர் புதினம் பார்க்க நடந்து போனார்கள். எல்லாக் கார்களுக்கும் முன்பாக பொலிஸ் வாகனங்கள். நீல வெளிச்சம் கக்கியபடி. தொடர்புக் கருவிகள் பரபரப்பாயிருந்தன. முற்றிலும் ஆயுதபாணிகளாகவும், கவசமணிந்துமிருந்த பொலிசார் நிலமையைத் தலமையகத்திற்கு அறிவித்து அங்கிருந்து கட்டளைகளைக் கேட்டுக் … Read more

தீவு மனிதன்

Alone

கீழ்வரும் தகவல்கள் சிலவேளை உங்களுக்கு உதவக் கூடும். ……. அன்ரனிக்கும், வத்சலாவுக்கும், எதிர்வீட்டு சிறீயையும், மஞ்சுளாவையும் கண்டால் பயம். …… சாந்தி விரும்பியதால் தயாபரன் திலக்சனையும் கூட்டிக்கொண்டு கனடா போய்விட்டான். ….. சபாரத்தினமும், கனகேசுவரியும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாததிலிருந்து பரதனும், பத்மினியும் வெளியில் போவதில்லை.   நான் மீண்டும் எனது தீவுக்கே திருப்பியனுப்பப்பட்டு விட்டேன். எனது தீவு நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது. இந்தத் தீவில் என்னுடன் சேர்த்து உயிருடனிருந்தவை ஒரு புத்தக அலுமாரி, ஒரு … Read more

கெட்டன வாழும்

இந்தியா. ராஜீவ் காந்தி கொலையுண்டு சில வருடங்கள் கழிந்து- வெளியே மத்தியான வெயில் எரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளே இருளாயிருந்த அறையில் அவன் பிளேன்ரீ குடித்துக் கொண்டிருந்தான். அதுதான் அவனது மத்தியான உணவு. காலை உணவும் கூட. மிகவும் சிறிய அந்த அறை எங்கும் தட்டுமுட்டுச் சாமான்களும், கடுதாசிகளும் பரவிக் கிடந்தன. யன்னல்கள் எதுவுமில்லை. பதிலாக கூரையில் இரண்டு கண்ணாடி ஓடுகள். சிதறிக் கிடந்த பொருட்களுக்கிடையில் அவன் இரவு படுத்திருந்த கிழிந்து போன பாய். பழைய சாமான்கள் போட்டு … Read more

மூக்குள்ளவரை !

‘சுட்டும் விழிச்சுடரே…. எங்கையோ பற்றிக்கொண்டதே..’ எண்டு அஸின் ஆட, ரசிச்சுப் பாத்துக் கொண்டிருக்கேக்கதான் எனக்கு வயசு போட்டுதெண்டு கவலை வந்திது. பண்டரிபாய், சௌகார்ஜானகி ரசிகரை எங்கடை காலத்திலை பாத்து சிரிச்சது இப்ப ஞாபகம் வர, ஒரு மாதிரித்தான் இருக்குது. இன்னும் ஒரு பத்து வருசத்திலை, ரஹ்மானின்ரை அல்லாட்டி யுவனின்ரை ஸ்பீற் பீற் கேட்டுக்கொண்டிருந்தா என்னைப் பாத்து சின்னனுகள் சிரிக்குமோ எண்டு ஒரு பியூச்சர் பயம் வரேக்கை… ‘கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ இந்த நேரத்திலை ஆர் என்னட்டை வாறாங்கள் எண்ட கேள்வியோடை, … Read more

கல் தோன்றி

இன்ரநெற்றும், சற்றலைற்றும் இல்லாத ஆயிரத்து தொளாயிரத்து ஆரம்பத்தில் ஒருநாள். பேய் மழை அடித்து ஊத்திக் கொண்டிருந்தது. யுத்த விமானங்களோ அல்லது பீரங்கிகளோ வீசும் குண்டுகளைப் போல இடி காதைப் பிளந்தது. மின்னல் அகோரமாய் வெட்டிக் கொண்டிருந்தது. மற்றும்படி மத்தியான நேரத்துக்கு ஒவ்வாத இருட்டு. மழை தொடர்ந்தும், சத்தமாயும்பெய்தது. மரங்கள் முறிந்து தாறுமாறாய் விழுந்தன. வெள்ளம் எல்லாப் பக்கங்களிலிருந்தும் கரை புரண்டது. ஒழுங்கைகள் எதுவும் தெரியாதபடி எங்கும் வெள்ளம். பள்ளக்குடி ஊரில், வெளியில் மழையில் மாட்டிக் கொண்டவர்களைத் தவிர … Read more