டிசே தமிழன்

பார்த்திபனின் ‘கெட்டன வாழும்’ 1. இந்தக் கதை இந்தியா, உக்ரேன், ஜேர்மனி என்கின்ற மூன்று நாடுகளில் நடக்கின்றது. இந்தியாவில் இந்தக் கதையைச் சொல்பவன் முதலில் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றான். ராஜீவ் காந்தி கொலை நடந்த சில வருடங்களிலிருந்து கதை தொடங்குகின்றது. கதைசொல்லி, இதற்கு முன் ஜெயிலில் இருந்தவன். அதற்கு முன் இயக்கத்தில் இருந்தவன். இவை எல்லாவற்றுக்கும் முன், இலங்கையில் அம்மா சுட்டுத் தரும் தோசைகளைச் சாப்பிட்டபடி, அக்காவோடும் அத்தானோடும் தியேட்டர்களில் படம் பார்த்துக் கொண்டு திரிந்தவன் என ஒரு … Read more

டிசே தமிழன்

  பார்த்திபனின் ‘கதை’ 1980களின் தொடக்கத்தில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பார்த்திபன் கதைகளை எழுதிவருகின்றார். ‘கதை’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் பார்த்திபன் இதுவரை எழுதிய கதைகளில் இருபத்துமூன்றை அவரின் நண்பர்கள் தொகுத்திருக்கின்றனர். ஒருவகையில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, புனைவுக்கும் நிஜத்திற்கும் இடையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது போலத் தோன்றும். பார்த்திபன் ஒருகாலத்தில் நிறையவும், நிறைவாகவும் எழுதி, பின்னோர் பொழுதில் எப்போதாவது ஒரு கதை என்கின்ற அளவிற்கு தன்னை ஒதுக்கியும்கொண்டவர். எழுதப்பட்ட காலவரிசைப்படி கதைகள் தொகுக்கப்பட்டது, … Read more

டிசே தமிழன்

காலம் அறிவியல் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. மகிழ்ச்சி தரக்கூடிய விடயம், வலைப்பதியும் நமது நண்பர்கள் பத்மா அர்விந்த், சுந்தரவடிவேல், வெங்கட்(ரமணன்) போன்றோர் அறிவியல் பகுதியில் எழுதியுள்ளனர். சிறுகதைகளை வழமைபோல தமிழகப் பெருந்தலைகள் நிரப்புகின்றார்கள். நான் வாசித்த ஒரேயொரு சிறுகதை, பார்த்திபனின் கதை. யதார்த்த வாதம் காலவாதியாகிப்போய்விட்டதென்ற கூச்சல்களிடையே (பதிவுகள் விவாதத்தளத்தில் ஈழத்துச் சிறுகதைகளை நிராகரிக்க ஜெயமோகன் பயன்படுத்திய ஆயுதமும் இதுதான்), பார்த்திபனின் கதை நெடுங்காலத்துக்கு மனதில் நிற்கக்கூடியது. எல்லா இசங்களையும் இரசங்களையும் போல யதார்த்தத்தளத்தில் எழுதப்படுகின்ற நல்ல கதைகளையும் … Read more