சிவம்

“கதைக்காமல் ஆக்கப்பட்டவர்களுக்கு” இதற்குள் உள்ளீடு, காலம், எழுத்தாளரின் சிந்தனைப்போக்கு, நீதி கோரல், நினைவுகொள்ளல் என்று வாசிப்பிற்கான வாசகனின் நுழைவாயிலில் நின்று பொறுப்போடு உள்ளனுப்பிவைக்கும் கனதியானவையெல்லாம் அடங்கிவிடுகின்றன. நமது நாட்டின் போர்ச்சூழலால் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வந்து விழுந்தவர்களும், தூக்கி வீசப்பட்டவர்களும் முன்பறிந்தேயிராத வெளிநாட்டுச் சூழலில் தனித்து நின்றே எதிர்கொண்ட வேதனையான பல இடர்களையும், நம்மவர்களாலேயே மேற்கொள்ளப்பட்ட பேச்சசுச் சுதந்திரத்தின்மீதான பலவடிவங்களிலான அடக்குமுறைகளையும் சமகாலத்தில் நாட்டில் வாழ்விடரின் வலியையும் சமூகக்கோபங்களையும் காலக்கண்ணாடியின்முன் நிறுத்துவதற்கான முயற்சியின் அங்கலாய்ப்புகளே பார்த்திபனின் “கதை”. இந்த … Read more