சிசிதா

Bachelor of Arts

தற்கால உலகில் பெண்கள் தொடர்பான கருத்தாக்கங்கள் அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றமையினைக் காண முடிகின்றது. பெண்களை குறித்து அதிக கவனத்தை செலுத்தும் துறைகளுள் மிக முக்கியமான இடத்தை பெறுவது இலக்கியங்கள் ஆகும். இருபதாம் நூற்றாண்டில் ஈழத்து புலம்பெயர் இலக்கியங்களில் குறிப்பாக புனைகதைகள் பெண்கள் தொடர்பான விடயங்களில் அதிகூடுதல் கவனத்தை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அடிப்படையில் புலம்பெயர் எழுத்தாளரான பார்த்திபனின் நாவல்களும் சிறுகதைகளும் மற்றும் தொடர்கதைகளும் முதன்மை பெறுகின்றன. “பார்த்திபனின் புனைகதைகளில் பெண்கள் – ஓர் ஆய்வு” என்னும் … Read more

அகிலன்

நம் மனதிற்கினிய பெரும்பாலானவற்றை பிரியநேர்ந்த கதை நம் எல்லோரிடமும் உள்ளது. ஓர் அடிவளவு நாவலோ, சைக்கிளின் அரவத்துக்குத் துள்ளித்தாவுகின்ற ஜிம்மியோ, வானவில் கனவுகளால் எண்ணங்களை நிரப்புகிற குடைவெட்டுப்பாவாடையொன்றின் விளிம்புகளோ, மடிப்புக்கலையாத முழுக்கைச்சட்டையின் நேர்த்தியோ, குளத்தடியோ, கடைத்தெருவோ ஏதோ ஒன்று நம் எல்லோருடைய இதயத்திலும் பிரதியிடப்படமுடியாத நினைவுகளால் நிரம்பியிருக்கிறது. புலப்பெயர்வின் இரண்டாம் தலைமுறை தோன்றத் தொடங்கியிருக்கும் இந்தச் சூழலில் நனவிடை தோய்தலின் அவாவும் கனதியும் தேய்ந்தடங்கி வருகிறது அல்லது அது குறிப்பிட்ட முதல் தலை முறைக்குரியதாக மட்டும் மட்டுப்படத்தொடங்கியிருக்கிறது. … Read more

முருகபூபதி

பார்த்திபனின் – “கதை” மனிதவாழ்வில் அற்றுப்போனவர்களின் அவலக்குரலை பதிவு செய்துள்ள படைப்பாளி. அந்நியமாவதற்கு தூண்டும் சமூகத்தின் வாழ்வுக் கோலங்களை சித்திரிக்கும் கதைகள். உருவம், உள்ளடக்கம், படைப்புமொழி, பாத்திர வார்ப்பு, காட்சி சித்தரிப்பு முதலான பல அம்சங்களை உள்ளடக்கியது சிறுகதை வடிவம். இலங்கையில் இந்த இலக்கியம் தோன்றிய காலத்தில், எழுத முன்வந்த எழுத்தாளர்கள் பலர், தென்னிந்திய சிற்றேடுகளில் வெளியான கதைகளின் பாதிப்பில், சென்னை மவுண்ட் ரோட்டையும் மெரீனா பீச்சையும் பின்புலமாகக்கொண்டு கதை பண்ணினார்கள்! அதற்குப்பின்னர் மறுமலர்ச்சிக்காலம் இலக்கியத்தில் பதிவானபோது … Read more

டிசே தமிழன்

பார்த்திபனின் ‘கெட்டன வாழும்’ 1. இந்தக் கதை இந்தியா, உக்ரேன், ஜேர்மனி என்கின்ற மூன்று நாடுகளில் நடக்கின்றது. இந்தியாவில் இந்தக் கதையைச் சொல்பவன் முதலில் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றான். ராஜீவ் காந்தி கொலை நடந்த சில வருடங்களிலிருந்து கதை தொடங்குகின்றது. கதைசொல்லி, இதற்கு முன் ஜெயிலில் இருந்தவன். அதற்கு முன் இயக்கத்தில் இருந்தவன். இவை எல்லாவற்றுக்கும் முன், இலங்கையில் அம்மா சுட்டுத் தரும் தோசைகளைச் சாப்பிட்டபடி, அக்காவோடும் அத்தானோடும் தியேட்டர்களில் படம் பார்த்துக் கொண்டு திரிந்தவன் என ஒரு … Read more

ஷேளி

எனக்கு வாசிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் ஒரு நூலை வாசித்து அது தொடர்பான கருத்தை ஒரு நிகழ்வில் பகிர்வது இதுதான் முதல் தடவை. இது எனக்கு ஒரு அனுபவத்தை தரும். ஆற்றலை வளர்க்கும் என்பதால் ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் மனதுக்குள் ஒரு சிறு பயம். அப் பயத்துடன் உங்கள் ஆதரவுடன் எனது கருத்துகளை முன்வைக்கின்றேன். பிழைகள் இருப்பின் முடிவில் சுட்டிக் காட்டி ஊக்குவியுங்கள். எனக்குத் தரப்பட்ட தலைப்பு பார்த்திபனின் கதையில் பெண்களின் இருப்பும் பெண்ணியப் … Read more

சிவம்

“கதைக்காமல் ஆக்கப்பட்டவர்களுக்கு” இதற்குள் உள்ளீடு, காலம், எழுத்தாளரின் சிந்தனைப்போக்கு, நீதி கோரல், நினைவுகொள்ளல் என்று வாசிப்பிற்கான வாசகனின் நுழைவாயிலில் நின்று பொறுப்போடு உள்ளனுப்பிவைக்கும் கனதியானவையெல்லாம் அடங்கிவிடுகின்றன. நமது நாட்டின் போர்ச்சூழலால் வெளிநாட்டு வாழ்க்கைக்குள் வந்து விழுந்தவர்களும், தூக்கி வீசப்பட்டவர்களும் முன்பறிந்தேயிராத வெளிநாட்டுச் சூழலில் தனித்து நின்றே எதிர்கொண்ட வேதனையான பல இடர்களையும், நம்மவர்களாலேயே மேற்கொள்ளப்பட்ட பேச்சசுச் சுதந்திரத்தின்மீதான பலவடிவங்களிலான அடக்குமுறைகளையும் சமகாலத்தில் நாட்டில் வாழ்விடரின் வலியையும் சமூகக்கோபங்களையும் காலக்கண்ணாடியின்முன் நிறுத்துவதற்கான முயற்சியின் அங்கலாய்ப்புகளே பார்த்திபனின் “கதை”. இந்த … Read more

வ.ந.கிரிதரன்

பார்த்திபனின் கதை சிறுகதைத்தொகுதி பற்றி… முகம் தெரியாத நண்பர்களுக்கு நன்றி: கிடைத்தது பார்த்திபனின் சிறுகதைத்தொகுப்பு ‘கதை’! புகலிட, புலம்பெயர் தமிழ்ப்படைப்பாளிகளில் மிகுந்த சிறப்பானதோரிடத்திலிருப்பவர் எழுத்தாளர் பார்த்திபன், சிறுகதை, நாவல் என வெளியான அவரது படைப்புகள் மிகவும் முக்கியமானவை. அவரது படைப்புகளில் பிறந்த மண்ணில் நிலவிய சூழல்கள், புகலிடம் நாடிப்புகுந்த மண்ணில் நிலவிய, நிலவிடும் சூழல்கள், நவீன உலகமயப்படுத்தப்பட்ட மானுட சமுதாயச் சூழலில் மானுடர் நிலை எனப்பல்வகைச் சூழல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். முக்கியமான படைப்பாளி. அவரது சிறுகதைகளில் 25 … Read more

மீராபாரதி

பார்த்தீபனின் கதைகள் மாட்டுச் சாணியா? பார்த்தீபனின் கதைகளை சரிநிகரில் வேலை செய்த காலங்களில் சரிநிகர் பத்திரிகைகளிலும் மற்றும் தூண்டில் சஞ்சிகைகளிலும் வாசித்த நினைவு. அவ்வாறு வாசித்து நினைவில் நிற்பது “வராமல் வந்திருந்தால்” என்ற கதை. இதன்பின் நமது அரசியல் செயற்பாடுகளினால் இலன்டனில் 1998ம் ஆண்டும் அரசியல் செயற்பாடுகள் இல்லாமல் தனியன்களாக அலைந்து திரிந்தபோது 2006ம் ஆண்டு ஜெர்மனியிலும் அவரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிட்டின. எழுத்தில் மட்டுமல்ல உரையாடலிலும் எள்ளலுடன் கூடிய விமர்சனங்களை செய்பவர் அவர் என்பதை அறிந்து … Read more

அனோஜன் பாலகிருஷ்ணன்

‘கதைகள்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கும் பார்த்திபன் சிறுகதைகளை வாசித்தேன். இவை எல்லாம் ஏன் சிறுகதைகளாக தொகுக்கப்படுகின்றன என்ற சோர்வே எஞ்சியது. எளிய சித்தரிப்புகள் ஊடாக கருத்தை நேரடியாகச் சொல்லும் சம்பவத் திரட்டுகள். எந்தவித இலக்கியப் பெறுமதியும் அற்றவை. இவற்றைப் பார்த்திபனின் நண்பர்கள் தொகுத்ததாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்கிற சந்தேகத்தில் மீண்டும் பார்த்தேன். அவர்களே ஓர் இடத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள், “பார்த்திபன ஒரு எழுத்தாளராக எங்களுக்குத் தெரியாது ஒரு நண்பராகத்தான் தெரியும்” … Read more

டிசே தமிழன்

  பார்த்திபனின் ‘கதை’ 1980களின் தொடக்கத்தில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்ததிலிருந்து பார்த்திபன் கதைகளை எழுதிவருகின்றார். ‘கதை’ என்ற பெயரில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில் பார்த்திபன் இதுவரை எழுதிய கதைகளில் இருபத்துமூன்றை அவரின் நண்பர்கள் தொகுத்திருக்கின்றனர். ஒருவகையில் இந்தக் கதைகளை வாசிக்கும்போது ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, புனைவுக்கும் நிஜத்திற்கும் இடையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது போலத் தோன்றும். பார்த்திபன் ஒருகாலத்தில் நிறையவும், நிறைவாகவும் எழுதி, பின்னோர் பொழுதில் எப்போதாவது ஒரு கதை என்கின்ற அளவிற்கு தன்னை ஒதுக்கியும்கொண்டவர். எழுதப்பட்ட காலவரிசைப்படி கதைகள் தொகுக்கப்பட்டது, … Read more

சு. குணேஸ்வரன்

புலம்பெயர்ந்தோரின் தமிழ்ப்படைப்புக்களில் ‘அந்நியமாதல்’ என்ற உணர்வுநிலை புனைவிலக்கியங்களிலும் ஆற்றுகைக் கலைகளிலும் கருப்பொருளாக எடுத்தாளப்பட்டு வருகின்றது. 80 களின் பின்னர் இலங்கையின் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து இனவுணர்வுச் சூழல்களின் தாக்கத்தால் புலம்பெயர்ந்து மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிலும் பெருமளவான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் படைப்புக்களில் அந்நியமாதல் உணர்வுநிலை தொடர்ச்சியான பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக தனிமை, அந்நியமாதல் ஆகிய இரண்டு பதங்களும் இலக்கியத்தில் எடுத்தாளப்படுகின்றன. சமூகத்தால் தனித்துவிடப்பட்டோர் பல்வேறுவிதமான உள – உடல் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து … Read more

மு.வேணுகா

பார்த்திபனின் 25 சிறுகதைகளையும் வாசித்து அதில் படிந்த – புரிந்த விடயங்களை எழுத முற்பட்டிருக்கிறேன். இலங்கை பற்றியனவாகவும் புலம்பெயர் தேசத்தின் வாழ்வு பற்றியனவாகவும் அமைந்த இச்சிறுகதைகளின் நோக்கும் போக்கும் வெவ்வேறாக அமைந்துள்ளமையை முதலில் சுட்டிக்காட்டவேண்டும். அம்மா பாவம், நாளை என்ற இரு சிறுகதைகளிலும் சிறுவனின் அங்கலாய்ப்புக் கூறப்பட்டுள்ளது. அம்மா பாவம் என்ற சிறுகதையில் வரும் சிறுவனின் ‘அம்மா ஏன் இப்படி இருக்கவேண்டும்’ என்ற சந்தேகமும் நாளை என்ற சிறுகதையில் வரும் வினோத் என்ற சிறுவனின் குடும்பம் ஜேர்மனியில் … Read more

செண்பகவல்லி

எழுத்தாளர் ஒருவருக்கு துணிவும் தைரியமும் வேண்டும் . அவ்வாறு இருப்பவரிடம்தான் தனித்தன்மையைக் காணமுடியும் . சமூகத்தை தன்வசம் கட்டிவைத்திருப்பதில் கலாச்சாரம் மிக முக்கியமானது. கலாச்சாரம் படிநிலையாக்கத்தைக் கொண்டது. இதனூடு மேலாதிக்கத்தைப் பேணுகிறது . இந்த மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாத நபர்களிடமிருந்து அதனை மறுக்கும் குரல்கள் வெளிப்படும் . அத்தகைய குரலாக பார்த்திபனின் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இருபத்தைந்து சிறுகதைகளையும் இரு வகையாகப் பார்க்கலாம். 1. எமது நாட்டில் நிலவிய இனப்பிரச்சினை . யுத்தத்தினால் ஏற்பட்ட அவலமும் வலியும் பசி. பாதியில் … Read more

சு. குணேஸ்வரன்

பார்த்திபன் 1984 செப்டம்பரில் இலங்கையிலிருந்து ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். புகலிடத்திலிருந்து எழுதிய ஆரம்பகாலப் படைப்பாளிகளில் முதன்மையானவர். இவர் எழுதிய நாவல்களையோ சிறுகதைகளையோ படைப்புக்கள் சார்ந்த கூற்றுக்களையோ ஈழத்தில் மிகச் சாதாரணமாகப் பெற்றுவிடமுடியாத நிலையே தற்போது பார்த்திபனைப் பொறுத்தவரையில் உள்ளது. இதுவரை பார்த்திபனின் படைப்புக்களுக்கு எழுதப்பட்ட விமர்சனங்களில் 14 சிறுகதைகளை மையமாகக் கொண்டு யமுனா ராஜேந்திரன் ‘கிழக்கும் மேற்கும்’ மலரில் எழுதியதே ஓரளவு விரிவான பதிவாக இருந்தது. மேலைத்தேயப் படைப்பாளிகளில் நைஜீரிய எழுத்தாளர் பென் ஒக்ரி, குர்திஸ் எழுத்தாளரான ஸோரக்லி … Read more

வளர்மதி

1. கதைகளில் சமூகக்கருத்தியலை அதாவது யதார்த்த வாழ்வு முறையையும், அதனுடனான போராட்டத்தினையும் உணர்வுகளின் வெளிப்பாட்டை மொழிகளில் கொண்டுவந்துள்ள விதம் சிறப்பாக இருக்கின்றது.இது உங்கள் கதைகளுக்கு வெற்றியைக் கொடுப்பதற்கு காரணமாக இருப்பதாக கருதுகின்றேன். அனேகமான கதைகளை வாசிக்கும் போது எமது உணர்வுகளும் அதனுடனே ஒன்றிவிடுகின்றது.( பனி எரியும் காலம், ஒரு தொழிலாளியும், ஒரு தொழிலாளியும் வந்தவள் வராமல் வந்தாள். ..). 2. யதார்த்த கருத்தியலில் இருந்து விடுபடத்துடிப்பதாகவும், போராடத் துடிப்பதாகவும் அதை கேள்விக்குள்ளாக்கியதாகவும் உள்ளன. (ராதா பெரிசானா பின,மனைவி … Read more

அ. இரவி

´அம்மா`வில் ஒரு பிரஜை ஒரு நாடு கதையை எடுத்துக் கொண்டால், எனக்கு அம்பையின் சூரியன் கதை ஞாபகத்திற்கு வருவதை தடுக்க முடியவில்லை. (அம்பையின், `சிறகுகள் முறியும்` சிறுகதைத் தொகுப்பில் உண்டு) அக் கதையும் பதுங்கு குழிக்குள் இருக்கும் சிறுவனையும், அம்மாவையும் பற்றிய கதைதான். (அக் கதை வியட்நாம் போர்ச்சூழலை வைத்து எழுதியது என ஞாபகம்) பார்த்திபனின் கதையுடன் ஒப்பிடுகிறபோது அது கலை நேர்த்தி மிக்க கதை. பார்த்திபனின் கதையும் அந்தளவு சிறப்பானதாக வந்திருக்க வேண்டும். ஏன் வரவில்லை? … Read more

பி.ரயாகரன்

பொதுவாக இன்றைய பாசிச சூழலிலும், சீரழிந்த மாற்றுக் கருத்து தளத்தையும் எதிர் கொள்ளமுடியாத நிலையில், வாழ்வின் மீதான மனித நம்பிக்கையை இழந்து சிலர் கருத்துக் கூற முனைகின்றனர். நம்பிக்கையாக மக்களின் வாழ்வு சார்ந்து கருத்து கூறுவது, பின் அந்த முயற்சிக்கு எதிராகவே கருத்து கூறுவது என்பது, மக்களின் முதுகில் குத்துவதாகும். தனிமனித அதிருப்திகள், எத்தனை நாளைக்கு இவை என்ற அங்கலாய்புகள். தனிமனிதர்களாக புழுங்கிப் போகும் அவலம். இந்த தர்க்கம் கூட சொந்த பூர்சுவா வாழ்வியல் நிலையில் இருந்து, … Read more

யமுனா ராஜேந்திரன்

`கிழக்கும் மேற்கும்` தொகுப்பில் இடம்பெற்ற பார்த்திபன் கதைகளும், புலம்பெயர் தமிழ் இலக்கியம் தொடர்பான எனது கட்டுரைக்கு எழுத்து வடிவிலும், தொகுப்பாளர் பத்மநாபருடன் உரையாடல் வடிவிலும், எனக்கு வந்த சில தனிப்பட்ட கடிதங்களிலும் பல்வேறு எதிர்வினைகள் வந்திருக்கிறது. புவனன் அம்மா சஞ்சிகையிலும், சுந்தரராமசாமி அவர்கள் தனிப்பட்ட ஒரு கடிதத்திலும் சுசீந்திரன், மு.நித்தியானந்தன் போன்றோர் பத்மநாபருடன் தொலைபேசி உரையாடலிலும் அரவிந்தன், ரவீந்திரன் போன்றவர்கள் என்னுடனான தொலைபேசி உரையாடலிலும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். புலம் பெயர்ந்த சூழலில் புவனன் தவிரவும் … Read more

சுகன்

பலமா? யாருக்கு? “செற்றியிலிருந்து ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் யூனியனின் சரிவை ஆராய்ந்தார்கள்” – பார்த்திபன் (சிறுகதை) 1. சோவியத் யூனியனின் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா? 2. ஜோனிவோக்கர் அடிக்கக் கூடாதென்கிறானா? 3. ஜோனிவோக்கர் அடித்தபடியே சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா? 4. செற்றியில் இருக்கக் கூடாதென்கிறானா? எனக்கு உறுத்துகிறது. நான் சாராயம் காய்ச்சி விற்கின்ற விளிம்பு மனிதன். – எக்ஸில், யூலை-ஓகஸ்ற் 1998, 55ஆம் பக்கத்திலிருந்து

திருமகள்

நீண்டகால இடைவெளிக்குப்பின் பார்த்திபனின் கதை, உயிரோடு இருப்பதற்கான சமிக்கையாக கொள்ளலாம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே இந்த நாள் அன்று போல் இல்லையே, அது ஏன் என்று சொல்லாம் போல இருக்கு. சரி, கதையில பல பேர் சம்பந்தமான உங்களுக்கு இருக்கிற பயத்தில அதுகள எல்லாம் தொடாம கதைய எழுதி முடிச்சிட்டிங்க. பெண்உரிமைப் போராளிகள் தாக்குவார்கள் என்ற பயம் வந்தால் தான், பெண்கள் தொடர்பாக புனையப்படும் இழி சொற்களைத் தவிர்ப்பீர்களோ? – tamilcircle.net

டிசே தமிழன்

காலம் அறிவியல் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. மகிழ்ச்சி தரக்கூடிய விடயம், வலைப்பதியும் நமது நண்பர்கள் பத்மா அர்விந்த், சுந்தரவடிவேல், வெங்கட்(ரமணன்) போன்றோர் அறிவியல் பகுதியில் எழுதியுள்ளனர். சிறுகதைகளை வழமைபோல தமிழகப் பெருந்தலைகள் நிரப்புகின்றார்கள். நான் வாசித்த ஒரேயொரு சிறுகதை, பார்த்திபனின் கதை. யதார்த்த வாதம் காலவாதியாகிப்போய்விட்டதென்ற கூச்சல்களிடையே (பதிவுகள் விவாதத்தளத்தில் ஈழத்துச் சிறுகதைகளை நிராகரிக்க ஜெயமோகன் பயன்படுத்திய ஆயுதமும் இதுதான்), பார்த்திபனின் கதை நெடுங்காலத்துக்கு மனதில் நிற்கக்கூடியது. எல்லா இசங்களையும் இரசங்களையும் போல யதார்த்தத்தளத்தில் எழுதப்படுகின்ற நல்ல கதைகளையும் … Read more

க. பூரணச்சந்திரன்

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் சிலருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். அமுதன், பார்த்திபன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. பார்த்திபனுடைய ஒரே ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். இக்கதையில் ஜெர்மனி செல்ல விசாவோடு வீட்டில் காத்திருக்கும் ஒரு தமிழ்க்குடும்பம் முதலில் காட்டப்படுகிறது. அந்த ஊரில் ஒரு சிங்களப் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவனுக்குக் கடன் தொல்லை. கடனை அடைத்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழ்க் குடும்பத்தின் தலைவனைக் கைதுசெய்து சிறையில் மிரட்டி, வெளி நாட்டிலிருந்து பணம் வாங்கிக் கொடுத்தால் விட்டுவிடுவதாகச் சொல்கிறான். அடுத்த காட்சியில் … Read more

சு.குணேஸ்வரன்

கருணாகரமூர்த்தியின் “வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல், சுண்டெலி, கலைஞன், தரையில் ஒரு நட்சத்திரம், ஆகிய சிறுகதைகளும், பார்த்திபனின் “ஐம்பது டொலர்ப் பெண்ணே, தெரிய வராதது, இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ ஆகிய சிறுகதைகளிலும் இந்த உலகளாவிய மானிய நேயம் படைப்புக்களில் ஒன்றுபடுவதைக் கண்டுகொள்ளலாம். பார்த்திபனையும் கருணாகரமூர்த்தியையும் பொறுத்தவரையில் 1. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள். 2. அந்நிய கலாசார சூழலில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளும் மானிட அவலங்கள். 3. பெண்கள் எதிர்கொள்ளும் உடல் உள சிதைவுகள் ஆகியவற்றை … Read more

நிருபா

எனக்கு பதினாறு அல்லது பதினேழு வயதிருக்குமெண்டு நினைக்கிறன். புகலிட இலக்கியத்தில ஈடுபாடு வந்த காலம். ‘ராதா பெரிசான பின்” எண்ட ஒரு சிறுகதை(பார்த்திபன் எழுதியது) வாசிச்சு அதிர்ந்துபோனன். பொம்பிளையளுக்கு முதல் முதல் ரத்தம் வாறது பற்றியும் அதை நாங்கள் பெருமையா கொண்டாடிறத கேள்விகேட்டும் எழுதப்பட்டிருந்த கதை அது. இந்தக் கதை பற்றிக் கதைக்கேக்க ரத்தம் வாறது எண்டு பொம்பிள பிறன்ஸ்சோட கதைக்கிறதே வெக்கமா இருந்திது. எண்டாலும் இந்தக் கதைதான் என்னைப் பிறகு சாமத்தியம் சடங்கு எண்டது பற்றியெல்லம் … Read more