யமுனா ராஜேந்திரன்

`கிழக்கும் மேற்கும்` தொகுப்பில் இடம்பெற்ற பார்த்திபன் கதைகளும், புலம்பெயர் தமிழ் இலக்கியம் தொடர்பான எனது கட்டுரைக்கு எழுத்து வடிவிலும், தொகுப்பாளர் பத்மநாபருடன் உரையாடல் வடிவிலும், எனக்கு வந்த சில தனிப்பட்ட கடிதங்களிலும் பல்வேறு எதிர்வினைகள் வந்திருக்கிறது. புவனன் அம்மா சஞ்சிகையிலும், சுந்தரராமசாமி அவர்கள் தனிப்பட்ட ஒரு கடிதத்திலும் சுசீந்திரன், மு.நித்தியானந்தன் போன்றோர் பத்மநாபருடன் தொலைபேசி உரையாடலிலும் அரவிந்தன், ரவீந்திரன் போன்றவர்கள் என்னுடனான தொலைபேசி உரையாடலிலும் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்கள். புலம் பெயர்ந்த சூழலில் புவனன் தவிரவும் … Read more

சுகன்

பலமா? யாருக்கு? “செற்றியிலிருந்து ஜொனிவோக்கர் அடித்தபடி சோவியத் யூனியனின் சரிவை ஆராய்ந்தார்கள்” – பார்த்திபன் (சிறுகதை) 1. சோவியத் யூனியனின் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா? 2. ஜோனிவோக்கர் அடிக்கக் கூடாதென்கிறானா? 3. ஜோனிவோக்கர் அடித்தபடியே சோவியத் யூனியன் சரிவை ஆராயக் கூடாதென்கிறானா? 4. செற்றியில் இருக்கக் கூடாதென்கிறானா? எனக்கு உறுத்துகிறது. நான் சாராயம் காய்ச்சி விற்கின்ற விளிம்பு மனிதன். – எக்ஸில், யூலை-ஓகஸ்ற் 1998, 55ஆம் பக்கத்திலிருந்து

திருமகள்

நீண்டகால இடைவெளிக்குப்பின் பார்த்திபனின் கதை, உயிரோடு இருப்பதற்கான சமிக்கையாக கொள்ளலாம், அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே இந்த நாள் அன்று போல் இல்லையே, அது ஏன் என்று சொல்லாம் போல இருக்கு. சரி, கதையில பல பேர் சம்பந்தமான உங்களுக்கு இருக்கிற பயத்தில அதுகள எல்லாம் தொடாம கதைய எழுதி முடிச்சிட்டிங்க. பெண்உரிமைப் போராளிகள் தாக்குவார்கள் என்ற பயம் வந்தால் தான், பெண்கள் தொடர்பாக புனையப்படும் இழி சொற்களைத் தவிர்ப்பீர்களோ? – tamilcircle.net

டிசே தமிழன்

காலம் அறிவியல் சிறப்பிதழாக வந்திருக்கின்றது. மகிழ்ச்சி தரக்கூடிய விடயம், வலைப்பதியும் நமது நண்பர்கள் பத்மா அர்விந்த், சுந்தரவடிவேல், வெங்கட்(ரமணன்) போன்றோர் அறிவியல் பகுதியில் எழுதியுள்ளனர். சிறுகதைகளை வழமைபோல தமிழகப் பெருந்தலைகள் நிரப்புகின்றார்கள். நான் வாசித்த ஒரேயொரு சிறுகதை, பார்த்திபனின் கதை. யதார்த்த வாதம் காலவாதியாகிப்போய்விட்டதென்ற கூச்சல்களிடையே (பதிவுகள் விவாதத்தளத்தில் ஈழத்துச் சிறுகதைகளை நிராகரிக்க ஜெயமோகன் பயன்படுத்திய ஆயுதமும் இதுதான்), பார்த்திபனின் கதை நெடுங்காலத்துக்கு மனதில் நிற்கக்கூடியது. எல்லா இசங்களையும் இரசங்களையும் போல யதார்த்தத்தளத்தில் எழுதப்படுகின்ற நல்ல கதைகளையும் … Read more

க. பூரணச்சந்திரன்

புலம்பெயர்ந்த எழுத்தாளர்களில் சிலருடைய சிறுகதைகளைப் படித்திருக்கிறேன். அமுதன், பார்த்திபன் போன்ற பெயர்கள் நினைவுக்கு வருகின்றன. பார்த்திபனுடைய ஒரே ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். இக்கதையில் ஜெர்மனி செல்ல விசாவோடு வீட்டில் காத்திருக்கும் ஒரு தமிழ்க்குடும்பம் முதலில் காட்டப்படுகிறது. அந்த ஊரில் ஒரு சிங்களப் போலீஸ் இன்ஸ்பெக்டர். அவனுக்குக் கடன் தொல்லை. கடனை அடைத்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழ்க் குடும்பத்தின் தலைவனைக் கைதுசெய்து சிறையில் மிரட்டி, வெளி நாட்டிலிருந்து பணம் வாங்கிக் கொடுத்தால் விட்டுவிடுவதாகச் சொல்கிறான். அடுத்த காட்சியில் … Read more

சு.குணேஸ்வரன்

கருணாகரமூர்த்தியின் “வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல், சுண்டெலி, கலைஞன், தரையில் ஒரு நட்சத்திரம், ஆகிய சிறுகதைகளும், பார்த்திபனின் “ஐம்பது டொலர்ப் பெண்ணே, தெரிய வராதது, இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ ஆகிய சிறுகதைகளிலும் இந்த உலகளாவிய மானிய நேயம் படைப்புக்களில் ஒன்றுபடுவதைக் கண்டுகொள்ளலாம். பார்த்திபனையும் கருணாகரமூர்த்தியையும் பொறுத்தவரையில் 1. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள். 2. அந்நிய கலாசார சூழலில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளும் மானிட அவலங்கள். 3. பெண்கள் எதிர்கொள்ளும் உடல் உள சிதைவுகள் ஆகியவற்றை … Read more

நிருபா

எனக்கு பதினாறு அல்லது பதினேழு வயதிருக்குமெண்டு நினைக்கிறன். புகலிட இலக்கியத்தில ஈடுபாடு வந்த காலம். ‘ராதா பெரிசான பின்” எண்ட ஒரு சிறுகதை(பார்த்திபன் எழுதியது) வாசிச்சு அதிர்ந்துபோனன். பொம்பிளையளுக்கு முதல் முதல் ரத்தம் வாறது பற்றியும் அதை நாங்கள் பெருமையா கொண்டாடிறத கேள்விகேட்டும் எழுதப்பட்டிருந்த கதை அது. இந்தக் கதை பற்றிக் கதைக்கேக்க ரத்தம் வாறது எண்டு பொம்பிள பிறன்ஸ்சோட கதைக்கிறதே வெக்கமா இருந்திது. எண்டாலும் இந்தக் கதைதான் என்னைப் பிறகு சாமத்தியம் சடங்கு எண்டது பற்றியெல்லம் … Read more

ராதா பெரிசானபின்

‘என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார் தசரதர். அவள் என்ன கேட்பாளோ என்று ஆவலாயிருந்தார். கைகேயி தலையைப் பரப்பிக்கொண்டு முகத்தில் கொஞ்ச வஞ்சத்துடன் அவர் முன்னால் வந்தாள். ‘கேட்டபின் மறுக்கமாட்டீர்களே?’ என்று சந்தேகப்பட்டாள். ‘இல்லைத் தயங்காமல் கேள். இந்த தசரதன் சொன்ன வாக்கு மீற மாட்டான்’ தசரதர் இன்னும் ஆவலானார். ‘ராமன் பதினான்கு வருடங்களுக்கு காட்டில் இருக்கவேண்டும்’ என்றாள் கைகேயி நிதானமாக. தசரதர் திடுக்கிட்டார். முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன. கைகளைப் பிசைந்தார். நாடியைத் தடவினார். கொஞ்சம் நடந்து … Read more

நாளை

வினோத், மஞ்சுளா அன்ரியிட்டப் போய் கசற் வாங்கிக்கொண்டு வா” என்று சொன்ன சாவித்திரி குமுதம் வாசித்துக் கொண்டிருந்தாள். ”எனக்குத் தெரியாது. நீங்க போய் வாங்குங்கோ” பாடசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த வீட்டு வேலையில் கவனமாயிருந்த வினோத் தனதலுவலில் மூழ்கினான். ”உங்க என்ன போட்டுக் கிளறிக்கொண்டிருக்கிறாய்? கசற்ற வாங்கித் தந்திட்டு பிறகு என்னண்டாலும் செய்” ”நான் மாட்டன். வீட்டு வேல செய்து முடிக்காட்டி நாளைக்கு ரீச்சர் பேசுவா” ”பெரிய எஞ்சினியர் படிப்புத்தானே படிக்கிறாய். நாள் முழுக்க விளையாடு. நான் ஏதேன் அலுவல் … Read more

ஒரு தொழிலாளியும், ஒரு தொழிலாளியும்

தலைக்குக் குளித்து, தூசுகளைத் தற்காலிகமாக விரட்டியபின் உடை மாற்றிக்கொண்டு உதயன் வெளியே வந்தான். காந்தனிடம் மாறிய காசின் ஒரு பகுதியை இன்று கொடுப்பதாகத் தவணை. சம்பளத்தை வங்கியிலிருந்து வழித்தாயிற்று. முடிவதற்குள் கூடுமானவரையில் கடன்கள் தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் பின்னர் பல்லிளிப்பது தவிர்க்க முடியாததாகிவிடும். பஸ்தரிப்புக்கு வந்து காத்து நிற்கையில் வேலை செய்யும் போதிருந்த இறுக்கம் தளர்ந்து இலேசானான். விஞ்ஞானத்தால் அநியாயமாகப் பாதிக்கப்பட்ட வெயில் உக்கிரமாயிக்க, பலர் இயலுமானவரை தங்கள் உடம்பைப் பகிரங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். ‘வேர்த்தால் நல்லாயிருக்கும்’ என்று நினைத்துக்கொண்டான். … Read more

அம்பது டொலர் பெண்ணே….

அவளைக் கண்டேன். கட்டைக் கரிய கூந்தல். வட்டக் கருவிழியா என்று சொல்ல முடியாதபடிக்கு முதுகு காட்டிக்கொண்டிருந்தாள். அரைக்கை போன்ற வெயில் கால உடைகளில் என்னைப் போலவே மாநிறம்! சில விளக்கமில்லாததுகள் கறுப்பு என்று என்னைச் சொல்வதை காதில் வாங்குவதில்லை. அவளைச் சுற்றி டொச் இளசுகள். மாணவர்கள் என்பதை அலட்சியமாகத் தெருவில் போடப்பட்டிருந்த பாரிய பைகள் காட்டின. இரண்டு, மூன்று சிகரெட் பற்ற, சிலது ஓடிப்போய் பிடித்து பெரியபிள்ளைகள் விளையாட்டு விளையாட, ஆங்காங்கே ஒன்றை ஒன்று அணைத்து உதடுகளால் … Read more

தெரியவராதது

ஆரம்பிக்கும் போதிருந்த மனநிலை இப்போதில்லை. அதுபாட்டுக்குப் புல்லாகிப் பூடாய், புழுவாகிப் பாணியில் எரிச்சலாகி, சலிப்பாய், விரக்தியாய் முடிந்தது. இது வழமைதான். வராவிட்டால் எங்கே என்று ஏங்கும். வந்தாலோ பழைய கதைதான். ‘பாவம் அதுகள். நான் உதவாம ஆர் உதவுறது? என்னை விட்டிட்டு அதுகளும் ஆரிட்டப் போறது’ என்று கவலைப்படும் அவனுக்குப் பெயர் பாலகிருஸ்ணன். பாலு என்று வீட்டிலும், இங்கேயும் வசதிக்குச் சுருக்கிக் கூப்பிட்டார்கள். அடுத்த விசாப் புதுப்பித்தலுடன் வயது இருபத்தைந்து முடிந்து விடும். தலைமுடி இதற்குப் பொய்ச்சாட்சி … Read more

ஒரு அம்மாவும், அரசியலும் !

சோறு ஆக்கி முடித்து சமையலறையை விட்டு சின்னமணி வெளியில் வந்தபோது தபாற்காரன் சுத்தமாகப் பொறுமையிழந்திருந்தான். சைக்கிள் மணிச்சத்தத்தில் அவனுடைய ஆத்திரம் வெளிப்பட்டது. சின்னமணி அருகில் வந்ததும் கடிதத்தை எறியாத குறையாக நீட்டிவிட்டு, தனக்குள் திட்டியபடி அடுத்த வீட்டுக்குப் போனான். நீலக்கடிதம். இரண்டாவது மகன் தாசன் மேற்கு யேர்மனியிலிருந்து அனுப்பியிருந்தான். ஈரக்கையை சீலையில் துடைத்துவிட்டு, கடிதத்தைப் பிரித்தபடி சின்னமணி வீட்டுக்குள் வந்தாள். அன்புள்ள அம்மா, அண்ணாவில் ஆரம்பித்து, நலமறிய அவாவி, இறைவனை வேண்டி, தொடர்ந்த கடிதத்தில், சில புதினங்களும் … Read more

பனியில் எரியும் இரவுகள்

கடைசி மூட்டையையும் தூக்கி கீழே வீசிவிட்டு நிமிர்ந்து, நாரி உளைவெடுத்து, வியர்வையைக் கையால் வழித்து எறிந்து, லொறியில் சாய்ந்துகொண்டபோதுதான் அந்த யோசனை வந்தது. இந்த லொறி என்ரை லொறியாயிருந்தா..? முருகேசு ஒரு மூட்டையில் குந்தியிருந்து ஆட்களின் சுறுசுறுப்பை அளந்து கொண்டிருந்தான். பணம் பூசிய உடம்பு. அவனருகில் போய்.. “முருகேசு.. அடிக்கடி கொழும்பு போய் வாறாய். கட்டுபடியாகுதுதானே..?” “பெரிசா சொல்லுறதுக்கில்லையடாப்பா. அங்கை வெளிக்கிட்டு இஞ்சை வாறவரைக்கும் கப்பம் கட்டிக்கொண்டே வரவேணும். இதுக்கெண்டே ஒவ்வொரு சந்தியிலயும் பரியர் போட்டுக்கொண்டு தடியங்கள் … Read more

வந்தவள் வராமல் வந்தால்

”ஹலோ” ”……” ”ஹலோ” இரைச்சல், உள்ளாலை கசமுச. தொடர்ந்து ….. ”ஹலோ” ”நான் ஜேமனியிலிருந்து செல்வம் கதைக்கிறன். மைதிலியோட கதைக்கலாமோ?” ”நான் இஞ்ச மார்க்கண்டு கதைக்கிறன். என்ன மாதிரி? காசலுவலுகள் முடிஞ்சுதோ?” ”அண்ணை ….என்னால முடிஞ்சளவுக்கு மாறியிருக்கிறன். விடிய பக்ஸிலை அனுப்பிவிடுறன்” ”முடிஞ்சளவுக்கெண்டா ….முழுக்க இல்லையோ?” ”அண்ணை…… ஏற்கனவே பன்ரண்டு தான் பேசி முடிச்சது. பிறகு சிங்கப்பூரில நிண்டு கொண்டு ரண்டனுப்பச் சொன்னியள். அனுப்பினனான். இப்ப மொஸ்கோவில நிண்டு கொண்டு திருப்பியும் ரண்டு கேக்கிறியள். நான் எங்கையண்ணை … Read more

ஒரு பிரஜை, ஒரு நாடு

1987, மே.22, வடமாராட்சி. ஊர் அமைதியாக இருந்தது. விலங்குகளும் சத்தம் போடவில்லை. பாதை விளிம்புகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு உறக்கத்திலிருந்தன. எந்த வீடும் வெளிச்சமாயிருக்கவில்லை. பாடசாலையிலிருந்து 3 வீடுகள் தள்ளியிருந்த அந்த வீடும் அமைதியாயும், இருளாயும் இருந்தது. வீட்டினுள் உருவங்கள் சத்தமின்றி நடமாடின. பழகிப் போய்விட்டதால் இருளில் நடமாடுவதற்கு அங்கு உருவங்கள் தடுமாறவில்லை. ‘அம்மா பயமாயிருக்கம்மா’ மிக மெதுவாக அந்தச் சிறுவன் பயப்பிட்டான். ‘உஷ். பயப்பிடாத. ஒண்டும் நடக்காது.’ அவன் அருகிலிருந்த அம்மாவின் குரலிலும் கலக்கம் கலந்திருந்தது. கடிகாரம் … Read more

தூள்

17.2க்குரிய புகையிரதங்கள் வருவதும் போவதுமாயிருந்தன. அடைபட்டிருந்த பயணிகள் வெளியே சிதற, காத்திருந்தவர்கள் முண்டியடித்து இருக்கை பிடித்தனர். எங்கும் இரைச்சல், ஆரவாரம். ஒலிபெருக்கிகள் வழமையான அறிவிப்புகளை தப்பாமல் ஒப்புவித்துக்கொண்டிருந்தன. மார்கழி மாதக் குளிரிலிருந்து தப்புவதற்காய் அநேகமாய் எல்லோரும் தலையிலிருந்து கால்வரை தடிப்பாய் போர்த்தியிருந்தார்கள். மூக்குச் சீறுவதும், இருமுவதும் சிம்பனியாயிருந்தது. புகையிரத நிலையத்தின் பின்பக்க வாசல். இருளைத் தடுத்து ஒளி விளக்குகள் யுத்தம் புரிந்து கொண்டிருந்தன. கொஞ்சத் தடிப்பாய் மழை தூறிக்கொண்டிருந்தது. வாகனங்கள் மிக எச்சரிக்கையாய் பயணித்தன. மழைக்காய் வாசலில் … Read more

அம்மா பாவம்

தோச்சு, மினுக்கி வைச்சிருந்த சட்டையாப் பார்த்து அம்மா எடுத்துத் தந்தா. நான் ஆசையோட வாங்கிப் போட்டன். கால்மேசுகளைப் போட்டாப் பிறகு சுகமாக சப்பாத்துக்களுக்குள்ள காலுகளை விட்டிட்டன். ஆனா முடிச்சுப் போட கஸ்ரமாய் இருந்தது. நான் சரியாகக் கஸ்ரப்படுகிறதைப் பாத்திட்டு அம்மா சிரிச்சுக்கொண்டே முடிச்சுப் போட்டுவிட்டா. கதிரையில இருந்து இறங்கி நிண்டன். அம்மா தள்ளி நிண்டு என்னை அழகு பார்த்தா. அவ எப்பவும் அப்படித்தான். அம்மாவுக்கு என்னில நல்ல விருப்பம். எனக்கும் அம்மாவில சரியான விருப்பம். கண்ணாடி மேசைக்கு … Read more

இழவுக்கும் தொழிலுக்கும் வ.செ

1997 சனவரி வெள்ளிக்கிழமை மொறட்டுவ… செனவிரத்தின வந்த போது வழக்கமான காலைநேரத் தூங்கலில் பொலீஸ் நிலையம் இருந்தது. இரண்டொரு பொலீஸ்காரர்கள் தமது இடங்களில் இருந்து ‘திவயின’, ‘லக்பிம’ படித்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை மக்களின் உடம்புக்குத் தரமான சவர்க்காரத்தை சிபாரிசு செய்து கொண்டிருந்தது. தடுப்புக் காவலில் இருந்த ஒரே ஒரு கைதி இன்னும் படுத்தே இருந்தான். எழும்புவதால் எதுவும் ஆகப்போவதில்லை என அவனுக்கு நன்கே தெரிந்தே இருக்கும். தனது மேசைக்கு வந்ததும் செனவிரத்தின மேலோட்டமாக … Read more

மேற்கின் ஒரு பக்கம்

புகை மூட்டமாகக் கவிந்திருந்தது. சுருள் சுருளாக, வளையம் வளையமாக புதிய புகைகள் வந்துகொண்டிருந்தன. இந்தக் கரும்புகைகள் எல்லாம் மேலே போய் மழையானால் அவ்வளவுதான். உலகமே வெள்ளத்தினால் மூச்சுத்திணறும். இல்லாவிட்டால் இருமும். சூழலை மாசடைவது பற்றியோ, தங்கள் சோர்ந்த நுரையீரல்களைப்பற்றியோ எந்த அக்கறையுமின்றி அவர்கள் தங்களால் முடிந்தளவு ஊதித்தள்ளியதைப் பார்த்து கவலையில் நானும் ஊதினேன். எல்லோர் வாயிலும் வாழைப்பழத்தில் சாம்பிராணிக் குச்சி குத்தியிருப்பதுபோல் வேறுவேறு விதமான சிகரெட்டுக்கள் சொருகியிருந்தன. மிஹெல் ஒன்றைப் பூரணமாக சாம்பலாக்கி, அடுத்ததை புகையிலை வைத்து … Read more

பலமா?

முன்கதைச் சுருக்கம் யேர்மனியின் பெரிய வீதிகளில் ஒன்று. எங்கு பார்த்தாலும் கார்கள்… லொறிகள்… பாரிய வாகனங்கள்….. நீளத்திற்கு வரிசையமைத்திருந்தன. பொறுமையிழந்தவர்கள் காரிலிருந்து இறங்கித் தாராளமாகத் திட்டினார்கள். மற்றும் பலர் சிகரெட் பிடித்தார்கள். கொண்டு வந்திருந்தவர்கள் எடுத்துச் சாப்பிட்டுக், குடித்தார்கள். ஒரு சிலர் புதினம் பார்க்க நடந்து போனார்கள். எல்லாக் கார்களுக்கும் முன்பாக பொலிஸ் வாகனங்கள். நீல வெளிச்சம் கக்கியபடி. தொடர்புக் கருவிகள் பரபரப்பாயிருந்தன. முற்றிலும் ஆயுதபாணிகளாகவும், கவசமணிந்துமிருந்த பொலிசார் நிலமையைத் தலமையகத்திற்கு அறிவித்து அங்கிருந்து கட்டளைகளைக் கேட்டுக் … Read more

தீவு மனிதன்

Alone

கீழ்வரும் தகவல்கள் சிலவேளை உங்களுக்கு உதவக் கூடும். ……. அன்ரனிக்கும், வத்சலாவுக்கும், எதிர்வீட்டு சிறீயையும், மஞ்சுளாவையும் கண்டால் பயம். …… சாந்தி விரும்பியதால் தயாபரன் திலக்சனையும் கூட்டிக்கொண்டு கனடா போய்விட்டான். ….. சபாரத்தினமும், கனகேசுவரியும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாததிலிருந்து பரதனும், பத்மினியும் வெளியில் போவதில்லை.   நான் மீண்டும் எனது தீவுக்கே திருப்பியனுப்பப்பட்டு விட்டேன். எனது தீவு நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்டது. இந்தத் தீவில் என்னுடன் சேர்த்து உயிருடனிருந்தவை ஒரு புத்தக அலுமாரி, ஒரு … Read more