‘கதைகள்’ என்ற பெயரில் வெளியாகியிருக்கும் பார்த்திபன் சிறுகதைகளை வாசித்தேன். இவை எல்லாம் ஏன் சிறுகதைகளாக தொகுக்கப்படுகின்றன என்ற சோர்வே எஞ்சியது. எளிய சித்தரிப்புகள் ஊடாக கருத்தை நேரடியாகச் சொல்லும் சம்பவத் திரட்டுகள். எந்தவித இலக்கியப் பெறுமதியும் அற்றவை. இவற்றைப் பார்த்திபனின் நண்பர்கள் தொகுத்ததாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்கிற சந்தேகத்தில் மீண்டும் பார்த்தேன். அவர்களே ஓர் இடத்தில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள், “பார்த்திபன ஒரு எழுத்தாளராக எங்களுக்குத் தெரியாது ஒரு நண்பராகத்தான் தெரியும்” ஆக ஒரு நண்பர் என்பதற்காக அவர் எழுதி வைத்திருப்பதைக் கதைகள் என்று நம்பி வாங்கி குதூகலத்தில் தொகுத்திருக்கிறார்கள். ஓ.எல் மாணவர்கள் படிக்கும் புத்தகத்தில் ‘தீவு மனிதன்’ என்கிற இவரின் கதை பிரசுரமாகி இருப்பதை பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களில் இலக்கிய அறிவை புரிந்துகொள்ள இயலுகிறது. உண்மையில் இத்தொகுப்பிலிருக்கும் அனைத்துக் கதைகளும் ஓ.எல் மாணவர்களுக்கு உரியதுதான். வாரப்பத்திரிகைகளில் வரும் மூன்றாம் தர மட்டமான எழுத்துகள். அவரின் சிறந்த கதைகளாகக் குறிப்பிடப்படும் ‘தீவு மனிதன்’, ‘கெட்டன வாழும்’ போன்றவை மிகச் சராசரியான எழுத்துகள். அதற்கும் கீழே என்றும் சொல்லலாம். 1986 தொடக்கம் 2012 வரை எழுதிய கதைகள் இப்புத்தகத்தில் உள்ளவை. ஆண்டு வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் கூட எந்த வளர்ச்சியும் இல்லை. அதே சராசரி சித்தரிப்புகள் இறுதிவரை.
மெலிஞ்சிமுத்தனின் ‘அத்தாங்கு’ வாசிக்கும்போது இதை எல்லாம் குறுநாவல் என்று நம்பி காகிதத்தை அநியாமாக்கி இருக்கிறார்களே என்று தோன்றியது. அதாவது அளவில் சிறியது இது 334 பக்கம். ஈழ இலக்கிய குப்பகைகளுக்குள் மீண்டும் ஒரு குப்பை. Bushit..
facebook.com/annogen/posts/1717506204962474
