சு.குணேஸ்வரன்


கருணாகரமூர்த்தியின் “வண்ணத்துப் பூச்சியுடன் வாழ முற்படல், சுண்டெலி, கலைஞன், தரையில் ஒரு நட்சத்திரம், ஆகிய சிறுகதைகளும், பார்த்திபனின் “ஐம்பது டொலர்ப் பெண்ணே, தெரிய வராதது, இழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ ஆகிய சிறுகதைகளிலும் இந்த உலகளாவிய மானிய நேயம் படைப்புக்களில் ஒன்றுபடுவதைக் கண்டுகொள்ளலாம்.

பார்த்திபனையும் கருணாகரமூர்த்தியையும் பொறுத்தவரையில்

1. புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களின் செயற்பாடுகள்.

2. அந்நிய கலாசார சூழலில் தமிழ்ப்பண்பாட்டு மனம் எதிர்கொள்ளும் மானிட அவலங்கள்.

3. பெண்கள் எதிர்கொள்ளும் உடல் உள சிதைவுகள்

ஆகியவற்றை தமது கதைகளில் வெளிப்படுத்துகின்றனர். மிகுந்த துயருடனும் கழிவிரக்கத்துடனும் வாசக மனங்களில் இரண்டு படைப்பாளிகளும் ஏற்றியும் விடுகின்றனர். நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியபோது யாருக்கும் தெரியாது செத்துப்போன பாலுவும், கேட்ட காசு கொடுக்காததால் ஏதோ ஒரு நாட்டில் தெருவில் விட்டுவிட்டு வந்தபோது செத்துப் போன புனிதாவும், பார்த்திபனின் கதைகளில் இந்த நூற்றாண்டை உலுக்கி விடக்கூடிய துயரக்கதைகளின் பட்டியலில் சேரக்கூடியவர்கள். ஆனால் பார்த்திபனிடத்தில் வெளிப்படும் துயர் கவிந்த கதைகள் கருணாகரமூர்த்தியிடம் மிக அடங்கிய குரலில் வெளிப்படுவதனையும் கண்டு கொள்ளலாம்.


http://keetru.com/index.php/2011-09-22-23-46-49/2012-sp-2012081659/20655-2012-08-01-08-46-05

Leave a comment